மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புகைபிடித்தவாறு பறிபோன உயிர்?.. வீடு தீப்பற்றி எரிந்து முதியவர் பரிதாப மரணம்.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சேதுபதி நகர் தெருவில் உள்ள வீட்டின் மாடி ஜன்னல் வழியாக கரும்புகை வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்த நிலையில், வேல்முருகன் (வயது 65) என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவரின் உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், மதுரையை சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகன் வேல்முருகன். வேல்முருகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக குடும்பத்துடன் பரமக்குடிக்கு வந்துள்ளார்.
வேல்முருகனின் மகன் பிரேம் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவரின் மனைவி உமா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில் வேல்முருகன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போதுதான் அவர் அறையில் தீப்பற்றி எரிந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளது. வேல்முருகனுக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில், புகைத்தவாறு உயிரிழந்தாரா? அல்லது உறங்கிவிட்டதால் உயிரிழப்பு நடந்ததா என கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.