மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி சாதனை படைத்த மாணவர்..!
தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெற்று இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09:30 மணியளவில் தேர்வுகள் இயக்குநராகத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளின்படி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவி கவிதா ஸ்ரீ 500 க்கு அதிகபட்சமாக 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
குவியும் வாழ்த்துக்கள்:
தொடர்ந்து பல மாணவர்களின் மாவட்ட வாரியான சாதனை அடுத்தடுத்து செய்திகளாக வெளியாகி பலருக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. இந்த தேர்வுக்கு பின்னர் மாணவர்கள் மேற்படி 11ம் வகுப்பு அல்லது பாலிடெக்னீக் உட்பட பிற படிப்புகளில் சேர விண்ணப்ப படிவத்தை வாங்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் சிறக்க பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டிராக்டருக்கு வழிவிட்டு தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து; இராமநாதபுரத்தில் 20 பயணிகள் காயம்.!
சாதித்த பரமக்குடி மாணவர்:
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26 ம் தேதி முதல் ஏப்ரல் 08 ம் தேதி வரை நடைபெற்ற 10 ம் வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வை, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, பாம்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் தீபிஸ் என்பவரும் எழுதியிருந்தார். இவரின் தந்தை தேர்வையொட்டிய நாட்களில் மறைந்தார்.
தந்தை இறந்த துக்கத்தையும் பொறுத்துக்கொண்டு மாணவர், நல்லபடியாக தேர்வெழுதி 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் அதிகபட்சமாக தமிழ் தேர்வில் 73 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: காதலில் தொடங்கி மூவர் கும்பலால் சீரழிக்கப்பட்ட சிறுமி; வீடியோ எடுத்து மிரட்டி நடந்த கொடுமை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.!