மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கபாடி போட்டியில் இரு கிராம மக்கள் மோதல்.. பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை, தொண்டி - புதுக்குடி மீனவ கிராமத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அனுமதி இல்லாமல் கபாடி போட்டிகள் நடைபெற்றது. அப்போது, இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்படவே, இருதரப்பும் தங்களை கட்டையால் தாக்கி கொண்டன.
இந்த மோதல் சம்பவத்தில் இருதரப்பை சார்ந்த 10 க்கும் மேற்பட்ட காயமடைந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 10 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், இருதரப்பும் அமைதியாக செல்லக்கூறி அறிவுறுத்தி இருந்த நிலையில், மீண்டும் நேற்று மீனவ கிராமத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பும் சண்டையிட்டதில் பெண் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக இராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
இதனால் கிராமங்களுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் கீழ், காவல் துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 8 பேரின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், விசாரணைக்கு பின்னர் ஜானகி, நாகவல்லி, பஞ்சவர்ணம், நல்லேந்திரன், மகேந்திரன், கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.