திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் சோகம்; 2வது திருமணம் செய்த கணவனால், மனைவி தற்கொலை..!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், குறிஞ்சி நகரில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). அப்பகுதியை சேர்ந்தவர் தீபன் (வயது 27). இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்னையில் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, தனது கணவரின் குடும்பத்தினருடன் ராஜேஸ்வரி வசித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் ராஜேஸ்வரியிடம் கணவரின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
இதனால் ஒருகட்டத்தில் ராஜேஸ்வரி தனது தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், தீபனின் பெற்றோர் தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடடந்த ராஜேஸ்வரி, தனது டைரியில் கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது என்னை மனதளவில் கடுமையாக பாதித்துவிட்டது என எழுதி வைத்துள்ளார்.
மன உளைச்சலோடு இருந்து வந்த ராஜேஸ்வரி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் தீபன் மற்றும் அவரின் பெற்றோரை கைது செய்யக்கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற அரக்கோணம் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.