மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பாசக்கார மனைவி..! பகீர் சம்பவம்.!
மதுபோதையில் உறங்கிய கணவனின் தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், உரியூர் கிராமத்தில் வசித்து வருபவர் சீராளன் (வயது 38). இவர் ரேடியோ சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். சீராளனின் மனைவி ஷோபனா (வயது 30). தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். இவர்களுக்குள் நேற்று முன்தினம் இரவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஷோபனா கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தக்கோலம் காவல் துறையினர் சீராளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து ஷோபனாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், "எனது கணவரான சீராளனுக்கு நாடகத்தில் நடித்து வரும் பழக்கம் இருந்தது.
அவர் நாடகத்தில் நடிப்பதற்காக அவ்வப்போது வெளியே சென்றுவிடுவார். இதனால் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் எனக்கு தெரியவரவே, நான் அவரை கண்டித்தேன். ஆனால், அவர் பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. மாறாக தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து என்னை கொடுமை செய்ய தொடங்கினார்.
சம்பவத்தன்று, நள்ளிரவு 2 மணியளவில் எங்களுக்குள் கள்ளக்காதல் தகராறு ஏற்பட, மதுபோதையில் உறங்கிய கணவரை ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன். பின்னர், குழந்தைகளை தூக்கிக்கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாயின் வீட்டிற்கு சென்றேன்.
கொலை வழக்கில் இருந்து நான் தப்பிக்க மப்பேடு காவல் நிலையத்தில் கணவர் என்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தேன். அவர்கள் தக்கோலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்கள். அதே நேரத்தில் கொலைக்கான விசாரணையும் நடந்தது. அதில் நான் சிக்கிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஷோபனாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.