மீண்டும் களமிறங்கிய வடமாநில கொள்ளை கும்பல்?.. அரக்கோணத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.. ரணகொடூரம்..!



Ranipet Arakonam Village Outer Area North Indian Robbers Intimation and Robbery Gold Jewel

அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் உள்ள வீட்டை குறிவைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை கும்பலின் தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், செய்யூர் கன்னிகாபுரம் பகுதியை சார்ந்தவர் கோபி. இவரது மனைவி சுதா (வயது 52). தம்பதியின் மகன் புஷ்பகரன் (வயது 24). புஷ்பகரன் ஆடிட்டரிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் கிராமத்திற்கு வெளியே, தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவே தனியாக வீடுகட்டி வசித்து வருகிறார்கள். 

நேற்று இரவு நேரத்தில் புஷ்பகரன், தாயார் சுதா, பெரியம்மா லதா (வயது 57), பாட்டி ரஞ்சிதம்மாள் (வயது 76) ஆகியோர் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் முகமூடி வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். உறவினர் வந்திருப்பதாக நினைத்த புஷ்பகரன் கதவை திறக்க கூறியுள்ளார். 

Ranipet

சந்தேகத்துடன் கதவை திறந்திருந்தாலும், வீட்டிற்கு வெளியே இருந்தவர்கள் கையில் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதத்துடன் இருந்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட புஷ்பகரன் கதவை உட்புறமாக தாழிடவே, மர்ம நபர் புஷ்பகரனை ஜன்னல் வழியாக சுட்டுள்ளார். இதனால் உடலில் குண்டு பாய்ந்து புஷ்பகரன் அலறி துடித்துள்ளார். 

சத்தம் கேட்டு விழித்த குடும்பத்தினர் கதறி கூச்சலிடவே, மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த அனைவரையும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடவே, புஷ்பகரனை கத்தியால் வெட்டி இருக்கின்றனர். வந்த கும்பல் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பேசி மிரட்டி இருக்கின்றனர்.  

துப்பாக்கி முனையில் பெண்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்த கும்பல், வீட்டில் இருந்த நகையையும் எடுத்து சென்றுள்ளது. மொத்தமாக 25 சவரன் நகைகள், ரூ.60 ஆயிரம் பணம், 3 செல்போன் போன்றவற்றையும் பறித்துவிட்டு, வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கூடாது. மீறி புகார் கொடுத்தால் மீண்டும் வந்து அனைவரையும் கொலை செய்வோம் என்றும் எச்சரித்துள்ளது. 

Ranipet

புஷ்பகரனின் செல்போன் மட்டும் கயவர்கள் கைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவே, போன் மூலமாக அரக்கோணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அனைவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற வைத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது. தீரன் திரைப்பட பாணியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள விவசாய நில வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த கும்பல், வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் வெட்டி மிரட்டி சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.