#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதல் திருமணம்.. மாமனாரை ஓடஓட வெட்டிக்கொலை செய்த மருமகன்.. அரங்கேறிய பயங்கரம்.!
ஒரே ஜாதியில் காதல் திருமணம் செய்தும் வசதி தடையாக இருந்ததால் தகராறு செய்து வந்த மனைவியின் தந்தையான மாமனாரை மருமகன் வெட்டிபடுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, கட்டப்பந்தங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் சசிதரன் (வயது 45). இவர் விவசாயி ஆவார். சசிதரனுக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். இவரின் மூத்த மகள் சினேகா. இவருக்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.
ஆனால், சினேகா கீராம்பாடி காலனியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை காதலித்து வந்ததால், அவருடன் திருமணம் செய்துகொண்டார். தம்பதிகளுக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வசதி வாய்ப்பு தடையாக இருந்துள்ளது.
சினேகாவின் பெற்றோர் அவரின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததால், சினேகா தனது கணவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். சசிதரனுக்கு சொந்தமான விவசாய நிலம் கீராம்பாடியில் உள்ள நிலையில், தினமும் அந்த கிராமம் வழியே தான் சசிதரன் விவசாய நிலத்திற்கு சென்று வருவார்.
இந்நிலையில், நேற்று இரவில் சசிதரன், மகன் சுரேந்தர் ஆகியோர் விக்னேஸ்வரனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். மேலும், இன்று அதிகாலை விக்னேஸ்வரனின் தந்தை மணி வேலைக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது, சசிதரன் அவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி இருக்கிறார்.
இந்த தகவல் மணியின் மகனான விக்னேஸ்வரன் மற்றும் பசுபதிக்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த இருவரும் சசிதரனை துரத்தி சென்று கத்தியால் சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். இரத்த வெள்ளத்தில் துடித்த சசிதரனை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஆற்காடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சசிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆற்காடு காவல் துறையினர் மணி (வயது 50), பசுபதி (வயது 27), விக்னேஸ்வரன் (வயது 25) ஆகியோரை கைது செய்துள்ளனர்.