மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலி தற்கொலைசெய்துகொண்டதால், காதலனும் மனமுடைந்து தற்கொலை.. ராணிப்பேட்டையில் சோகம்.!
உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதலி தற்கொலை செய்துகொண்டதால், மனமுடைந்த காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர், வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மகள் சந்தியா (வயது 18). சந்தியா அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சுப்பிரமணியன் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் காசி. இவரின் மகன் கதிர்வேல் (வயது 24). இவர் கேட்டரிங் பட்டம் பயின்றுவிட்டு, வேலை பார்த்து வருகிறார்.
பக்கத்து வீடுகளில் வசித்து வந்த சந்தியாவுக்கும் - கதிர்வேலுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறி, உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். சந்தியாவை திருமணம் செய்ய முடிவு செய்த கதிர்வேல், சந்தியாவின் பெற்றோரிடம் பெண்கேட்டு இருக்கிறார். இந்த விஷயத்திற்கு சந்தியாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சந்தியா, நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர், இராணிப்பேட்டை காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலியின் மரண செய்தியை அறிந்து நொறுங்கிப்போன கதிர்வேல், தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்து சோளிங்கரை அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள மலையடிவாரத்திற்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். சோளிங்கர் காவல் துறையினர் கதிர்வேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.