மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல அரசியல்கட்சி பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை; ராணிப்பேட்டையில் பயங்கரம்.!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 35). மக்க தேசம் கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
உள்ளூரில் முக்கிய பிரமுகர் போல வலம்வந்த விவேகானந்தன் மீது பல வழக்குகள் இருக்கின்றன. நேற்று முன்தினம் நண்பருடன் வாலாஜா சென்றுவிட்டு மீண்டும் வீடுதிரும்பியபோது, காவேரிப்பாக்கம் பகுதியில் காரில் வந்த மர்ம கும்பல் இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருவரும் கீழே விழ, விவேகானந்தனை கும்பல் சரமாரியாக வெட்டிசைத்து தப்பிச்சென்றது. அவரின் நண்பர் படுகாயத்துடன் துடித்துகொன்டு இருந்தார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்துபோன மக்கள் கொடுத்த தகவலின் பேரில், காவேரிப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விவேகானந்தனின் நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட, விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.