மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி செலுத்தி பார்வையை இழந்த பள்ளி மாணவி.. கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம்.!
அரசின் சார்பில் பள்ளியில் வைத்து மாணவிக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கு பின்னர், அவரின் பார்வை பறிபோன நிலையில் அரசின் சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என பெற்றோர்கள் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரில் வசித்து வருபவர் தமிழ்செல்வி. இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 17 வயதுடைய மகள் இருக்கிறார்கள். கடந்த ஜன. 4 ஆம் தேதி அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் தமிழ்செல்வியின் 17 வயது மகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திய மறுநாளில் இருந்த சிறுமியின் உடல்நலம் மோசமாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையின் போதே 17 வயது சிறுமியின் பார்வை பறிபோயுள்ளது. இந்த விஷயத்தை தொடக்கத்தில் கவனத்தில் எடுத்துக்கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம், அதுகுறித்து விசாரணை செய்ய நோய்தடுப்பூசி ஆய்வுக்குழுவிடம் தகவலை தெரிவித்து விசாரணை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், தற்போது வரை விசாரணை ஏதும் நடைபெற்றதாக தெரியவில்லை. இந்நிலையில், மகளின் உடல்நலத்தை உறுதி செய்ய தமிழ்செல்வி ராணிப்பேட்டை, வேலூர், சென்னை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மகளை அனுமதி செய்து இருக்கிறார். இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சிறுமிக்கு அரசின் முதல்வர் காப்பீடு திட்டம் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தும், அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை.
சிறுமியின் தொடர் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர், சிறுமிக்கு இணைப்பு திசு கோளாறு உள்ளது. அதனால் அவரின் பார்வை திரும்பாது என்று தெரிவித்து இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக கண்ணீர் மல்க சிறுமியின் தாய் தமிழ்செல்வி தெரிவிக்கையில், "மகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கண்பார்வை பறிபோனது. மாவட்ட சுகாதாரத்துறையை அஞ்சினால், அந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள். இந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அலைய வைக்கிறார்கள்.
மருத்துவ சிகிச்சைக்காவது வழிவகை செய்து கொடுங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தேன். அதிலும் முதலில் நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்து, தற்போது போன் செய்தால் கூட எடுப்பது இல்லை. நானும், எனது கணவரும் தினக்கூலிகள்தான். எங்களின் மகளின் உயிரை காப்பாற்ற நாங்கள் என்ன செய்வது?" என்று தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வைராலஜிஸ்ட் தெரிவிக்கையில், "தடுப்பூசி கண்பார்வை பறிபோனதற்கு காரணமாக இருக்காது. சிறுமிக்கு ஏற்கனவே இருந்த பாதிப்பு, அதன் அறிகுறியை தூண்டி நோயை அதிகரித்து இருக்கும். இந்த பார்வை இழப்பு ஒரேநாளில் நடந்து இருக்காது. அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனைப்போல, இதே பள்ளியில் பயின்று வந்த மற்றொரு சிறுமி, தடுப்பூசி செலுத்திய 20 நாட்கள் கழித்து குயிலின் பார் சிண்ட்ரோம் என்ற நரம்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியின் சிகிச்சைக்காக குடும்பத்தினர் ரூ.6 இலட்சம் வரை செலவிட்டு, அரசின் சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. தடுப்பூசி தொடர்பாக புகார் அளித்தால், அதனை மாவட்ட நிர்வாகம் AEFI என்ற தடுப்பூசி செயல்பாடு சாதக/பாதக விஷயங்களை கண்காணிக்கும் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் என்ன செய்கிறது என்று தெரியவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் தெரிவித்தார்.