மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது மகளை தாய்மாமனுக்கு திருமணம் செய்ய வைக்க ஏற்பாடு; இரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட சிறுமி.!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை, அம்மூர், மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வரும் நபர் ரங்கநாதன். இவருக்கு ரம்யா என்ற 16 வயது மகள் இருக்கிறார். இவருக்கும், சிறுமியின் தாய்மாமா பொன்னுரங்கன் என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததாக தெரியவருகிறது.
திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த சிறுமி, வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இரயில் முன் பாய்ந்து தற்கொலை
இதனையடுத்து, வாலாஜாபேட்டை இரயில் நிலையத்திற்கு சென்ற சிறுமி, கன்னியாகுமரி அதிவிரைவு இரயில் முன்பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த இருப்புப்பாதை காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அத்தை மக எனக்கு வேண்டாம்?.. பெற்றோரின் வற்புறுத்தலால் மருத்துவ மாணவர் தற்கொலை?.. சென்னையில் சோகம்.!
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு திருமண வயதே ஆகாத நிலையில், அவருக்கு திருமணம் செய்ய வற்புறுத்தியதால் உயிரை மாய்த்துகொண்டது தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கணவன்.. கடன் தொல்லையால் மணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை.!