மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வலையில் சிக்கிய ஒரு மீன்! ஒரே நாளில் லட்சாதிபதியான மீனவர்! அதில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு அண்மையிலும் மீன்பிடித்து விட்டு கரை திரும்பியுள்ளனர். அப்பொழுது ஜீவா என்பவருக்கு சொந்தமான வலையில் 25 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன் சிக்கியுள்ளது.
அந்த கத்தாழை மீன் மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் விலை மதிக்ககூடியது. இத்தகைய மீன் வலையில் சிக்கிய தகவல் கிடைத்ததும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுக்க திரண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த ஒரு மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போகியுள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இந்த வகையான கற்றாழை மீன்கள் அரிதாக சிக்கக்கூடியது. இந்த வகை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். இந்த நெட்டியானது ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்மை தன்மைக்கு அருமருந்தாக உள்ளது. இவை வலைகளில் சிக்குவது பேரதிர்ஷ்டம் என கூறியுள்ளனர்.