மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று முதல் தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு! யாருக்கெல்லாம் அனுமதி இல்லை தெரியுமா?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில்கள், மசூதிகள் மற்றும்கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத தலைவர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.10,000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தளங்களை இன்று ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கோயில்களில் நுழையும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச நோய், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.