#Breaking: சென்னையை புரட்டியெடுத்த மழைக்கு காரணம் என்ன?: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Reason for Chennai Rain due to Michaung Cyclone

ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையை கடக்கும் மிக்சாங் புயலின் காரணமாக, வட தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் மழையை நேற்று முதல் சந்தித்த வந்தன.

தலைநகர் சென்னையில் கொட்டி தீர்த்த தொடர் கனமழையின் எதிரொலியாக, நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி பகுதியில் கார்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஏரி ஒன்றும் உடைந்தது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முற்றிலும் பயன்படுத்த இயலாத வகையில், வெள்ள நீரால் சூழப்பட்டது. அதேபோல, காற்றும் மணிக்கு 108 கிலோமீட்டர் வேகம் வரை வீசியது.

இந்நிலையில், புயல் தற்போது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் வருகிறது. சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் அதிக மழை பெய்ததற்கு காரணமாக, புயலின் மழை கொடுக்கும் மேகங்கள் சென்னையை சுற்றி சூழ்ந்ததுதான் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிக மழை பெய்ததாகவும், அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 89 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது, இயல்பை விட 29% இது அதிகம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.