மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன் விரோதத்தால் ஊராட்சி செயலர் படுகொலை... மரியாதைக்காக உறவினர்களே வெட்டிக்கொன்ற பயங்கரம்.!
முன் விரோதத்தின் காரணமாக ஊராட்சி செயலரை, அவரது அண்ணன் மகன்கள் வெட்டிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் இடையபட்டி ஊராட்சியின் செயலர் லட்சுமணன். இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருகிறார். இதனால் கோவிலின் முதல் மரியாதை அவருக்கே செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்த விஷயம் பிடிக்காத அவரது அண்ணன் மகன்கள் கோவிலில் தங்களுக்கு தான் முதல் மரியாதை தரவேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.தொடர்ந்து நேற்று அதிகாலையளவில் கோபத்துடன் இருந்த லட்சுமணனின் அண்ணன் மகன்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, லட்சுமணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.