மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரிமால் புயல் எதிரொலி: கடலூர், நாகை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபேற்று, மே 26ம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. புயலுக்கு ரிமால் என பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #JustIN: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; அருவிகளில் குளிக்க தடை.!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு பின்னாட்களில் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலால் மேற்குவங்கம், ஒடிசா மாநில கடலோர மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புயல் வங்கக்கடலில் உருவாகி வருவதை உறுதி செய்யும்பொருட்டு, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி-காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலுக்குள் சென்ற மீனவர்கள் அனைவரும் விரைவில் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சிறுமி ஒருவருக்கு ரூ.30 ஆயிரம்" - மகளின் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்; சென்னையில் பகீர்.!!