#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கொடநாடு கொலையும் சில கேள்விகளும்" ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட பரபரப்பு வீடியோ
தமிழகத்தில் தற்போது கொடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து தான் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஒரு வீடியோவை தந்தி டீவியின் முன்னாள் பிரபலமான நிரூபர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது என்றும் சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடுபொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர்.
கொடநாடு விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் சசிகலா குடும்பத்தினர் எங்களை சும்மா விடுவார்களா? இவை எதற்கும் நான் அஞ்சமாட்டேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து தான் செய்த ஆய்வுகள் மற்றும் கருத்துகளைப் பற்றி பேசியுள்ள வீடியோ ஒன்றை ரங்கராஜ் பாண்டே யூட்யூபில் வெளியிட்டுள்ளார்.