மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்.! அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக கூட்டத்தில் ஒருமனதாக சிறப்பு தீர்மானம்.!
சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வந்தது. இந்த கோரிக்கை சமீப காலமாக தீவிரம் அடைந்துள்ளது. எம்எல்ஏ -க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் நேரில் கோரிக்கை விடுத்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.