புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கருப்பு பூஞ்சை நோயால் ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி.!



retired school teacher died for black fungus

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் நேரிடுகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Black fungusஇந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரமோகன் என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலங்குடி பகுதியில் மட்டும் கருப்பு பூஞ்சை நோயால் இது இரண்டாவது இறப்பு என தகவல் வெளியாகி உள்ளது.