திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.!
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை கடந்த ஆண்டு 58 லிருந்து 59ஆக உயர்த்தி தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில் இன்று சட்டப் பேரவையில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வு பெறும் வயது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.