மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் பெண் மீது கொண்ட மோகத்தில் உல்லாசம்!.. திருமணம் செய்ய மறுத்த வாலிபர் அதிரடி கைது..!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி தேரிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் பாலமுருகன் (33). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர்களது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பாலமுருகனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தனிமையில் சந்தித்து காதலை வளர்த்த அவர்கள் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். நீண்ட காலமாக இது தொடர்ந்ததால், இந்த விவகாரம் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது.
இதனியடுத்து இளம் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலமுருகனை வலியுறுத்தியுள்ளார். இதற்கு பாலமுருகனின் தந்தை ஜெயராமனும், தாயார் பிரம்மசக்தியும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்து வீட்டு வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.
இதையடுத்து இளம்பெண் பாலமுருகனுடனான தொடர்பு குறித்தும் அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்தும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவுரிமனோகரியிடம் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் நிலைய ஆய்வாளர், பாலமுருகனை கைது செய்தார். மேலும் தலைமறைவான அவருடைய தந்தை, தாயாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.