மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் ரத்து!
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு, சபரிராஜன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.