திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரில்ஸ் மோகம்.. லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டவர் கைது.!
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் இந்த சாகசத்தை வீடியோ எடுத்து ரில்சாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ரீல்ஸ் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனதால் தொலைகாட்சி செய்திகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபரை தேடி வந்துள்ளனர். இதில் வாகனத்தை ஓட்டி சாகசம் செய்தது கரூர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தங்கப்பாண்டியனை காவல் துறையினர் கைது செய்ததோடு அவர் ஓட்டிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.