திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரும் சோகம்... தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி 26 வயது ஐடி ஊழியர் பரிதாப பலி!!
திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி - சிட்டி அம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் கலையரசன்(26) தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது நண்பரின் நிகழ்ச்சிக்கு கலையரசன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது கலையரசன் கோயம்பேடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடனே அப்பகுதிக்கு வந்த கோயம்பேடு புலனாய்வு காவல் துறையினர் கலையரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய தனியார் போக்குவரத்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை இழந்த சோகத்தில் கலையரசன் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.