அதிவேக பயணத்தால் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து...9 பேர் படுகாயம், 3 பேர் உயிரிழப்பு!!



Road accident 3 members died 9 members in serious

திருச்சி அருகே உள்ள மாத்தூர் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி குடும்பத்துடன் வந்த காரும் காரைக்குடியில் இருந்து மாத்தூர் நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரில் பயணம் செய்த மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45), டிரைவர் கதிர் (47) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Road accident

மற்ற 9 பேர் படுகாயமடைந்த நிலையில் இச்சம்பவம் குறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த 9 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்து எப்படி ஏற்பட்டது என்று குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.