மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து... தலைப்பிரசவத்திற்காக மருத்துவமனை சென்று திரும்பிய தம்பதியினருக்கு நிகழ்ந்த சோகம்!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்ன அடைக்கான் - சுமதி தம்பதியினர். சின்ன அடைக்கான் அதே பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுமதி தனது தலைப்பிரசவத்திற்காக தனது தாய் வீடான ராமநாதபுரம் மண்டபம் அருகே உள்ள வேதாளை சிங்கிவலை குப்பத்திற்கு சென்றுள்ளார். அங்கு சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சுமதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனையடுத்து வீட்டிற்கு சுமதி தனது குழந்தை, கணவர் மற்றும் உறவினர் பெண்ணாண காளியம்மாள் ஆகியோர் மலைராஜ் என்பவரது ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர். ஆட்டோ மதுரை தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலை நதிபாலம் அருகே வந்த போது எதிரே வந்த கார் ஆட்டோ மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சுமதி மற்றும் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். சின்ன அடைக்கான், குழந்தை மற்றும் காளியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சின்ன அடைக்கான் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளது. காளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த கார் ஓட்டுனரான விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.