மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சட்டென திரும்பிய டேங்கர் லாரி! தடுமாறிய புல்லட்! கால்களை இழந்த கல்லூரி மாணவன்!
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென திரும்பியதால் லாரிக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சாலையில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் அருகே தண்ணீர் லாரி ஓன்று சென்றுகொண்டிருந்தது. நேராக சென்ற லாரி திடீரென இடதுபுறமாக திரும்பியதால் லாரியின் பக்கவாட்டில் புல்லட் பைக்கில் சென்றுகொண்டிருந்த சபியுல்லா என்ற கல்லூரி மாணவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் மாணவனின் வலது கால் துண்டானது. மேலும், இடது காலும் பலத்த காயமடைந்த நிலையில் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.