திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னடா ஓவரா பேசுற... கார் மீது மோதிவிட்டு உரிமையாளரையே சரமாரியாக தாக்கிய லாரி ஓட்டுனர்... போலீசார் விசாரணை!!
![Road accident in Chennai palaavaram area](https://cdn.tamilspark.com/large/large_n5529824341698997935006b1e6f0cc63e71cbb14e05d4b69e0389a-66302.jpg)
சென்னையை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதி வேகத்தில் வந்த லாரி ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் அதிர்ஷ்ட வசமாக காரில் பயணித்தவர்களுக்கு எந்த சேதமும் ஆகவில்லை.
ஆனால் கார் சேதம் அடைந்தது. இதனால் காரின் உரிமையாளர் லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆவேசம் அடைந்த லாரி ஓட்டுனர் காரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் விரைந்து வந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.