அதிவேக பயணத்தால் நிகழ்ந்த கோரவிபத்து... நேருக்கு நேர் மோதி கொண்ட கார் - பேருந்து... 3 பேர் பலி 2 பேர் படுகாயம்...



road-accident-in-thirupur-3-members-died

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி 5 பேர் காரில் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது கார் கொடுவாய் காக்காபள்ளம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது  திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

அதே நேரத்தில் எதிரே பழனி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. இதில் காரும் எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து  நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக்கொண்டதில் காரின் உதிரிபாகங்கள் அங்கங்கே சிதறி கிடந்துள்ளன.  

Thirupur

பயங்கர சத்தத்துடன் இந்த கோர விபத்து அரங்கேறியதில் காரில் பயணித்த 5 பேரில் 3 பேர் வீரக்குமார், முருகேசன் மற்றும் சஜித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 2 பேர் மகேஷ் மற்றும் கிஷோர் ஆகியோர் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.