மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா பாணியில் கொடூர கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள்.. போலீசார் விசாரணை!
சிவகங்கை மாவட்டம் பள்ளிதம்மம் அருகே உள்ள கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன். இவருக்கு உபகாரம் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதில் சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சின்னப்பன் தனது குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மறுமணம் நபர்கள் சிலர் இவரது வீட்டுக்குள் திடீரென புகுந்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
இவர்களின் சத்தம் கேட்டு சின்னப்பன் கத்தி கூச்சலிட மர்மகும்பல் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் சின்னப்பனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினரையும் மர்மகும்பல் வெட்டியுள்ளது. இதில் குடும்பத்தினர் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.
இதனிடையே அந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இதனிடையே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சின்னப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.