மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலர் தினம் கொண்டாட உள்ளவர்களுக்கு ஷாக் நியூஸ்.. 550 ரூபாயாம்..! அதிர்ச்சியில் காதல் ஜோடிகள்..!!
பிப்ரவரி 14-ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் காதலர் தினமானது சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் காதல் ஜோடிகள் தங்களுக்கு பிடித்த துணைக்கு ரோஜா பூ மற்றும் பரிசு வாங்கி மகிழவைப்பது வழக்கம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் தோவாளை மலர்சந்தை ரோஜா பூக்களுக்கு பிரபலமான சந்தையாகும். இந்த சந்தையில் ரோஜா பூக்கள் கட்டு ரூ.150 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.550 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஒரு ரோஜா பூவின் விலை ரூ.10 முதல் ரூ.35 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காதலர் தினம் கொண்டாடப்படுவதால் உலக அளவில் ரோஜா பூக்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு காரணமாக தற்போது இந்த விலை உயர்வு இருப்பதாக பூ வியாபாரிகள் சந்தையில் கூறுகின்றனர்.