மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
1000 ரூபாய் கொடு.. பட்டா கத்தியை காட்டி ரவுடிகள் அட்டூழியம்.! அதிரவைத்த சிசிடிவி வீடியோ!!
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் ரவுடிகள் மூன்று பேர் பட்டா கத்தியை காட்டி ரூ 1000 மாமூல் வாங்கிவிட்டு, போலீஸிடம் சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. கடைக்கு முதலில் இருவர் வந்து அங்கிருந்த உரிமையாளரின் மனைவியிடம், அக்கா, ஆயிரம் ரூபாய் கொடு என கேட்டுள்ளனர். அதற்கு அவர் என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மற்றொரு ரவுடி, பணத்தை கொடுடி என கூறி அவரை அடிக்க சென்றுள்ளார்.
பின் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மிரட்டியுள்ளார். இந்நிலையில் பயந்துபோன அந்தப் பெண் தன்னிடம் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் கேமரா வைத்திருக்கிறாயா, போலீசிடம் சென்றால் உன்னையும் முன் புருஷனையும் தீர்த்துக்கட்டிவிடுவோம் என கூறிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார்கள் அந்த ரவுடிகளை தேடி வருகின்றனர்.