ரவுடியை கைது செய்ய சிறைக்கு வெளியே காத்திருந்த போலீஸ்.! ரவுடியை தப்ப வைத்த சிறை வார்டன்கள்.!



rowdy escaped from jaill

சிவகங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி வசந்த் என்பவர் சமீபத்தில் வழிபறி கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து வசந்த் மீது மற்றொரு வழக்கில் பிடிவாரண்டி இருப்பதால் சிவகங்கை தனிப்படை போலீசார் அவரை கைது செய்வதற்காக சிறைக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வசந்த் சிறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பந்தப்பட்ட ரவுடி முன்பே சென்று விட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறையில் இருந்து வெளியே வர ஒரு பாதை தான் இருக்கிறது. இந்த பாதை வழியாக வெளியே வர வில்லை என்று கேட்டுள்ளனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சிறை வார்டன்கள் 2 பேர் ரவுடியை வேறு வழியாக தப்ப வைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறைகண்காணிப்பாளர் பணியில் இருந்த சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இரு வார்டன்களையும் பணியிடை நீக்கம் செய்து சிறைக்கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.