திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
துணி துவைக்க ஏரிக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பத்தினர்..!
ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் கப்பூர்பாய் தனது மனைவி ஷர்மிளா மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.கப்பூர்பாய் வழக்கமாக தனது வீட்டின் அருகே இருக்கும் இரும்பேடு பெரிய ஏரியில் தான் துணிகளை துவைப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் கப்பூர்பாய் மற்றும் அவரது மனைவி ஷர்மிளா ஆகியோர் வீட்டில் இருந்த அனைவரின் அழுக்கு துணிகளையும் எடுத்து பக்கத்தில் இருக்கும் ஏரிக்கு துவைக்க சென்றுள்ளார். அப்போது ஷர்மிளா எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின் ஷர்மிளாவின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஆரணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துணி துவைக்க சென்ற பெண் ஏரியில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.