பழிக்குப்பழி.. சேலம் அருகே கொடூர கொலை.. 20 வயது கர்ப்பிணி மனைவி பரிதவிப்பு.!!



Salam Vazhapadi Near Area Man Murder Revenge Death Police Investigation

பழிக்குப்பழியாக பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர், நாழிக்கல்பட்டி ஆதி திராவிடர் காலனி பகுதியை சார்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்தவர் சரவணன் (வயது 19). இவர்கள் இருவரும் நேற்றிரவு உறவினரை சபரிமலைக்கு அனுப்புவதற்கு கெஜ்ஜல் நாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளனர். 

இதன்போது, இவர்களை வழிமறித்த 11 பேர் கொண்ட கும்பல், திருநாவுக்கரசு மற்றும் சரவணனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளது. கல்வீசி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் நிலைகுலைந்துபோன 2 பேரும், இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திரண்டுவிடவே, 11 பேர் கும்பல் தப்பி சென்றுள்ளது. 

Salem

படுகாயமடைந்து இருந்த இரண்டு பேரையும் மீட்ட உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திருநாவுக்கரசு நள்ளிரவு 12 மணியளவில் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த உறவினர்கள் திருநாவுக்கரசின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சரவணனனுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மல்லூர் காவல் துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், "நாலிக்கல்பட்டி பகுதியை சார்ந்த திலீப்குமார் என்பவர், கடந்த 2019 ஆம் வருடம் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். 

Salem

இவ்வழக்கில், திருநாவுக்கரசு மற்றும் சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதனால் திலீப்குமாரின் ஆதரவாளர்கள் பழிக்குப்பழி கொலையில் ஈடுபட திட்டமிட்டு செயல்பட்டது அம்பலமானது. திருநாவுக்கரசு மற்றும் சரவணன் ஆகியோர் திலீப்பின் கொலைக்கு பின்னர் வாழப்பாடியில் வசித்து வந்த நிலையில், நேற்று சொந்த ஊர் வந்த போது சம்பவம் நடந்துள்ளது. 

இக்கொலை வழக்கில் தொடர்புடைய பலரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பழிக்குப்பழி சம்பவத்தில் உயிரிழந்த திருநாவுக்கரசுக்கு 20 வயதுடைய ரம்யா என்ற மனைவியும், அவர் கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.