மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ளி வியாபாரி கார் மோதி பலி; திட்டமிட்ட கொலையா?.. தீவிர விசாரணையில் சேலம் காவல் துறை.!
சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (47). மனைவி சொர்ணலதா (40). வெள்ளி வியாபாரியாக இருந்து வந்த சங்கர், வெள்ளிக்கட்டியை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த பிப்.2ம் தேதி காலை பால் வாங்க கடைக்குச்சென்று திரும்பியபோது, அவ்வழியே வந்த கார் மோதி விபத்தில் சிக்கினார்.
அக்கம் - பக்கத்தினரால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சங்கரின் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டாவது மனைவி சொர்ணலதா என்பது தெரியவந்தது.
இதனால் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனிடையே, சங்கரின் மீது கார் மோதும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.