திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு வேலை, நலத்திட்ட உதவி பெயரில் விசிக பெண் பிரமுகர் மோசடி; கூட்டாளிகளுடன் தட்டிதூக்கிய அதிகாரிகள்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி (வயது 42). இவர் விசிக கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவித்தொகை பிரிவில் வேலை பார்த்து வருவதாக கூறி அரசு வேலை மற்றும் உதவி தொகைகளை பெற்று தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, காயத்ரி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர்.
நேற்று காயத்ரி மற்றும் அவரது கூட்டாளிகள் ரூபாய் 20 கோடி பணத்துடன் தலைமறைவாகி, சென்னையில் உள்ள ஹோட்டலில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அதிரடியாக காயத்ரியை கைது செய்தனர்.
அவரது ஆதரவாளர்களான கார் ஓட்டுநர் ராஜசேகர் (வயது 32), அசோக்குமார் (வயது 39) ஆகியோரும் கைது செய்யப்பட்டு சேலம் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு எடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.