மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்கள்.. சேலத்தில் பரிதாபம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி, பாம்பாட்டி கிராமம் நாயகர் தெருவில் வசித்து வருபவர் மகேஸ்வரன். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுகன்யா. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரனின் 15 வயது மகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்த சிறுமி, உடையை மாற்ற அறைக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பாக ஆத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மகேஸ்வரன் தலைவாசல் கிராமம் அருகேயுள்ள மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் ஆவார்.
இவர் குடும்பத்தின் பணிச்சுமை மற்றும் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வர எதுவாக ஆத்தூர் பேருந்து பணிமனை அருகே இருக்கும் ஹவுஸிங்போர்டுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். அங்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால், நரசிங்கபுரம் 5 ஆவது வார்டு பகுதியில் இருக்கும் ஆறுமுகம் என்பவரின் வீட்டிற்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக மறுகுடிபெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் தற்கொலைக்கான காரணமாக துண்டுசீட்டில், "எனது சவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம்" என்று எழுதி வைத்துள்ளார். இதனால் ஆசிரியர் கண்டித்ததால் சிறுமி தற்கொலை செய்தாரா? அல்லது எவ்டீஸிங் காரணமாக விபரீத முடிவு எடுத்தாரா? வேறு பிரச்சனையா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.