மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் தொல்லை வழக்கில் கராத்தே மாஸ்டர் கைதான வழக்கு.. 8 பேர் கும்பல் செய்த சம்பவம்.. அதிர்ச்சி பின்னணி.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியை சார்ந்தவர் ராஜா. இவர் கராத்தே மாஸ்டராக இருந்து வரும் நிலையில், கருமந்துறை தனியார் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். இதே பள்ளியில் பயின்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜாவின் மீது புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுமி 8 ஆம் வகுப்பு படிக்கையில் இருந்து இக்கொடூரம் நடந்து வந்த நிலையில், மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகையில் விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கருமந்துறை காவல் துறையினர் கராத்தே மாஸ்டர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில், கராத்தே மாஸ்டர் ராஜாவை மர்ம கும்பலனொன்று கடத்தி சென்று பணம் பறித்தது தெரியவந்தது. சம்பவத்தன்று செல்போனில் சாப்பாடு ஆர்டர் செய்வது போல ராஜாவை தொடர்பு கொண்டு 200 இட்லி, 200 தோசை கேட்டுள்ளது.
இந்த உனவுகளை அங்குள்ள புத்திரகவுண்டம்பாளையம் வாரச்சந்தை அருகே கொண்டு வரச்சொன்ன கும்பல், ராஜா வந்ததும் உணவை பெற்றுக்கொண்டு முகத்தில் மிளகாய்பொடி தூவி கடத்தி சென்று அடித்து, பின்னர் பலத்த காயத்துடன் கருமந்துறை காவல் நிலையத்திற்கு அருகே விட்டு சென்றுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பின்னரே காவல் துறையினர் ராஜாவை கைது செய்துள்ளனர். ராஜாவை நீதிமன்றத்தில் சமர்பிகையில் இந்த விஷயத்தை நீதிபதியிடம் ராஜா தெரிவிக்க, நீதிபதியின் உத்தரவின் பேரில் 8 பேர் கும்பலின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.