மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்து, மனைவியை கொன்று தலைமறைவான கணவன்.. பரபரப்பு சம்பவம்..!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தம்மம்பட்டி ஊராட்சி செந்தாரப்பட்டி கிராமத்தில் உள்ள அங்கமுத்து மூப்பனார் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 27). இவர் பால் வியாபாரியாக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரின் மகள் உமா மகேஸ்வரி (வயது 18).
செந்தாரப்பட்டியில் இருக்கும் உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு உமா மகேஸ்வரி வந்து சென்ற போது, மணிகண்டன் உமாவுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் உமா மகேஸ்வரி செந்தாரப்பட்டியில் மணிகண்டனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கணவன் - மனைவிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று காலை மர்மமான முறையில் உமா மகேஸ்வரி வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தம்மம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான சில மாதங்களிலேயே மர்மமனான முறையில் இறந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மணிகண்டன் தனது மனைவியை கொலை செய்து தப்பி சென்றாரா? எனவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.