மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி இறந்துபோன துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. ஒரேநாளில் பெற்றோரை இழந்த மகள்கள்.!
அன்புக்கு அன்பான மனைவி உயிரிழந்த சிலமணிநேரத்தில் கணவரும் உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், பைத்தூர் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் கலியபெருமாள் (வயது 60). இவரின் மனைவி சின்னம்மாள் (வயது 55). தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.
சின்னம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, பல இடங்களுக்கு மனைவியை அழைத்து சென்ற கணவர் சிகிச்சைக்கு அனுமதி செய்து அன்புடன் கவனித்து வந்துள்ளார். தான் உண்டு தனது மனைவி உண்டு என கலியபெருமாள் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று காலை 9 மணியளவில் சின்னம்மாள் திடீரென உயிரிழந்தார்.
இதனால் சோகத்தில் மூழ்கிப்போன கலியபெருமாள் அப்படியே அமர்ந்துவிட, மனைவியை எண்ணி அழுதுகொண்டே இருந்துள்ளார். இந்த தகவல் உறவினர்களுக்கு தெரியவரவே, இறுதிச்சடங்குகள் நடைபெற்று வந்துள்ளன. சோகத்தோடு இருந்து வந்த கலியபெருமாள், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பதறிப்போன உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவரின் உடலையும் ஒரே இடத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்துள்ளனர். இந்த தகவல் ஊர் மக்களுக்கும் தெரியவந்து பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.
மனைவி இறந்த சோகத்தில் கணவரும் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், தங்களின் பெற்றோரை இழந்த துக்கத்தில் மகள்களும் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகினர்.