திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்: நோயாளி கழுத்தறுத்து தற்கொலை.!
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பல மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்வது வழக்கம். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஆனந்தன் என்பவர், உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் 06ம் தேதி முதல் ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தன் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக சிகிச்சை பெற்று வந்தார்? தற்கொலை செய்துகொண்டது ஏன்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.