மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்திய 20 வயது கல்லூரி மாணவி போக்ஸோவில் கைது; கல்லூரி காதலால் விபரீதம்.!
கல்லூரியில் நட்பாக ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி ஆர்வக்கோளாறில் 17 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்திய பெண்மணி போக்ஸோவில் கைதாகியுள்ளார். 20 வயதில் சிறுவனின் கருவை சுமக்கும் பெண் போக்ஸோவில் கைதான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், செங்கரடு கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுவன், காரியாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதல் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். இதே கல்லூரியில் அரசனூரை சேர்ந்த 20 வயது மாணவி, 2 ஆண்டுகள் தாமதமாக பி.காம் பயில கல்லூரியில் இணைந்துள்ளார்.
கல்லூரியில் 17 வயது சிறுவனுக்கும் - 20 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் சிறுவன் வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறான். மகனை காணாது தேடியலைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருப்பூர் காவல் துறையினர் விசாரணையை கிடப்பில் போட்டதால், சிறுவனின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். இதனால் விசாரணை சூடுபிடித்தாலும், சிறுவன் எங்கு சென்றான் என்ற விபரம் இல்லை.
இந்த நிலையில், மாயமான சிறுவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் இருப்பது உறுதியானது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனை மீட்டனர். மேலும், அவனுடன் இருந்த இளம்பெண்ணை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில், காதல் வயப்பட்டு இருந்த சிறுவனை கல்லூரி மாணவி அழைத்து சென்று மாதக்கணக்கில் குடும்பம் நடத்தி வந்தது அம்பலமானது. இதனால் அவர் 3 மாத கர்ப்பம் ஆகியுள்ளார். இதற்கிடையில் காவல் துறையினர் தூண்டில் போட்டு இருவரையும் பிரித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் சிறுவனை பெற்றோருடன் அனுப்பி வைத்த அதிகாரிகள், இளம்பெண் மீது போக்ஸோவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.