மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலமுறை கூப்பிடும் வரமறுத்த மனைவி! நடுரோட்டில் கணவன் செய்த மோசமான காரியம்!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகனேஸ்வரி என்ற பெண்ணிற்கும் அதே பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்த நிலையில் மூன்று வயதில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே கோபி குடித்துவிட்டு மனைவியை கொடுமைப்படுத்திவந்ததாக கூறப்படுகிறது.
கணவனின் கொடுமை தாங்காமல் மோகனேஸ்வரி அவருடன் அடிக்கடி சண்டை போட்டுவந்துள்ளார். ஒருகட்டத்தில் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் மோகனேஸ்வரி. இதனால் ஆத்திரம் அடைந்த கோபி தனது மாமியார் வீட்டிற்கு சென்று பலமுறை தனது வீட்டிற்கு வருமாறு கோபி தனது மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால் மோகனேஸ்வரி வர மறுத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு மோகனேஸ்வரி வீடு திரும்பி கொண்டிருக்கையில் கோபி நடு ரோட்டில் வைத்து மீண்டும் தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால், மோகனேஸ்வரி வருவதாக இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கோபி தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் மோகனேஸ்வரி சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளார். சத்தம் கேட்டு ஒடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்னனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் கொப்பியையே வலைவீசி தேடிவருகின்றனர்.