வீட்டில் இருந்தபடி தினமும் ரூ.3000 சம்பாதிக்கலாம் என விளம்பரம் வருதா?.. மக்களே உஷார்.. பட்டை நாமம்..!



salem-man-cheated-by-telegram-link

 

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை, சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). தனியார் பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். 

டெலகிராமில் அறிமுகமான நபர் ஒருவர், நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் முதல் 3000 வரை வீட்டில் இருந்தபடி பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறியிருக்கிறார். 

மேலும், அதில் முதலீடு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளார். அவர் நம்பும் விதமாக பல பேசி மனம் மாற்றப்பட்ட நிலையில், முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தவருக்கு ரூ.17 ஆயிரம் வட்டி உட்பட கமிஷன் என பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் மகிழ்ச்சியடைந்த லோகநாதன், உண்மையில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ஏழு தவணையாக ரூபாய் 7 லட்சத்து 61 ஆயிரம் பணத்தை அனுப்பி இருக்கிறார். 

பணப்பரிவர்த்தனை முடிந்ததும் டெலிகிராம் லிங்க்குகள் மற்றும் அவர் பேசிய நபரின் அழைப்புகள் செயலிழந்துவிடவே, அதிர்ந்து போன லோகநாதன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.