"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சேலம் மேயரின் மருமகள் மர்ம மரணம்; பெண் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார்.!
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன். இவரின் மகன் சுதர்சன். இவருக்கு திருமணம் முடிந்து சுதா என்ற மனைவி இருக்கிறார்.
சம்பவத்தன்று சுதாவுக்கு உடல்நிலை சரியில்லை என அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துவிட்டு, இதுகுறித்து அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினர் வருவதற்குள், சுதாவின் மாமியார் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். மருத்துவமனையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனால் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சுதாவின் உறவினர்கள் குற்றசாட்டை முன்வைத்தனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த மேயர், பாதிக்கப்பட்ட பெண்மணி புகையிலை பழக்கத்தால் உயிரிழந்து இருக்கிறார் என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.