மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: 43 பயணிகளோடு புறப்பட்டு நடுரோட்டில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து.. 8 பயணிகளுக்கு நேர்ந்த சோகம்.!
நடுரோட்டில் பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், 8 பயணிகள் லேசான காயத்தோடு அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட ஆம்னி பேருந்து, பெங்களூர் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 43 பேர் பயணம் செய்தனர்.
பேருந்து நள்ளிரவு நேரத்தில் சேலம் மேட்டூர் அருகே பயணித்துக்கொண்டு இருந்த நிலையில், எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது.
சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, பயணிகளை அவசர கதியில் வெளியிற அறிவுறுத்தியுள்ளார். பயணிகள் அவசர கதியில் இறங்கிக்கொண்டு இருக்கும்போதே தீ அதிகரித்துள்ளது.
இதனால் தீயில் சிக்கியவர் 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 8 பேர் தீக்காயத்தோடு பேருந்தில் இருந்து இறங்கி உயிர் தப்பினர். இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து மேட்டூர் கருமனை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.