திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigNews: 4 மாத கர்ப்பிணி பெண் வாந்தி எடுக்கும்போது உயிரிழப்பு; கால்வாயில் மயங்கி தவறி விழுந்ததில் நடந்த சோகம்.!
ஆழமான கால்வாயில் வாந்தி எடுக்க வந்த கர்ப்பிணி திடீரென மயங்கி அதற்குள் விழுந்து பலியானார். அதிகாரிகளின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணின் உயிர் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இதே கிராமத்தை சேர்ந்த பெண்மணி சந்தியா. தம்பதிகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட, வாந்தி எடுக்க வீட்டின் வெளியே உள்ள கழிவுநீர் கால்வாய் அருகே நின்றுள்ளார். அப்போது, அரைமயக்க உணர்வு ஏற்பட்டதால் தவறி விழுந்துள்ளார்.
அவரை யாரும் கவனிக்காத நிலையில், அக்கம் பக்கத்தினர் எதற்ச்சையாக வந்தபோது சந்தியாவை பார்த்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அங்கு அவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கால்வாய் பகுதிகளை ஆழப்படுத்தி அகலப்படுத்திவிட்டு, குடியிருப்பு பகுதியில் மேற்கூரையை மூடாமல் திறந்து நிலையில் வைத்ததே அவரின் மரணத்திற்கு காரணம் என்பதும் அம்பலமாகியுள்ளது.
கர்ப்பிணியான சந்தியாவின் மரணத்திற்கு முன்னே சிறுவர்களும் விழுந்து உயிரிழக்க, அதிகாரிகளின் அலட்சியத்தால் அவை மூடப்படாமல் இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அம்மாபேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.