மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Job Alert: சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடையில் வேலைவாய்ப்பு; 247 ஆட்கள் தேவை.. விபரம் இதோ.!
தமிழகத்தில் பிரதான உணவகங்கள் ஒன்றாக செயல்பட்டு வரும் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடையின் உரிமையாளராக, ஆர்.ஆர் தமிழ்செல்வன் செயல்பட்டு வருகிறார்.
தற்போது பல நகரங்களில் சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது கடையின் கிளைகளை வெவ்வேறு நகரங்களில் ஏற்படுத்த ஆர்.ஆர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனை முதற்கட்ட பணிகளை தொடங்கி மேற்கொண்டு வந்த நிலையில், சுமார் 247 பணியாளர்களை தேர்வு செய்ய தயாராகியுள்ளது. இதற்கான அறிவிப்பும் சேலம் ஆர்.ஆர் பிரியாணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, பொதுமேலாளர், கேட்டரிங் மேனேஜர், மேனேஜர், கேட்டரிங் சூப்பர்வைசர், ரெஸ்டாரண்ட் சூப்பர்வைசர், கேஷியர், பிரியாணி மாஸ்டர், பிளேட் மாஸ்டர், கிட்சன் ஹெல்பர், வெயிட்டர், கிளீனர் என 247 நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான நேர்காணல் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் காலை 9 மணிமுதல் நடைபெறுகிறது. சைதாப்பேட்டையில் உள்ள கீழ்காணும் முகவரியில் நேர்காணல் நடைபெறுகிறது.
பணியில் சேர விரும்புவோர் புதிய எண் 96, பழைய எண் 38/6, இரண்டாவது மாடி, இணைப்புச்சாலை, சைதாப்பேட்டை என்ற முகவரிக்கு மேற்கூறிய இரண்டு நாட்கள் நேரடியாக சென்று நேர்காணலில் பங்கேற்கலாம்.
மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க Hotelsalemrr13@gmail.com என்ற முகவரிக்கு தங்களின் சுயவிபரத்தை அனுப்பலாம்.