பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
சேலம்: இலட்சணக்கில் சம்பளம் வாங்கியும் பத்தல.. திருமணமான 6 ஆண்டுகளில் குடும்பத்தோடு தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் மனைவியின் இறுதி கோரிக்கை.!
சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் திலக் (வயது 38). மென்பொறியாளரான திலக், வீட்டில் இருந்தவாறு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
திலக்கின் மனைவி மகேஸ்வரி (வயது 35). தம்பதிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுக்கு தற்போது 5 வயதுடைய சாய் கிருஷாந்த் என்ற மகன் இருக்கிறார். திலக்கின் பெற்றோர் வசந்தா - சிவராமன் ஆகியோரும் திலக்கின் வீட்டிலேயே வசிக்கின்றனர்.
வீட்டின் கீழ் தளத்தில் பெற்றோர்கள் இருக்க, மேல்தளத்தில் தனது குடும்பத்துடன் திலக் வசித்து வந்துள்ளார். பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனத்தில் பணியாற்றி சிவராமன் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பதைபதைப்பு நிகழ்வு நடந்துள்ளது.
வசந்தா உயிருக்கு போராடிய நிலையிலும், சிவராமன் சடலமாகவும் இருந்துள்ளார். மேல் தளத்திற்கு சென்று பார்த்தபோது, திலக் தூக்கில் சடலமாக இருந்தார். மனைவி, குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டனர். வசந்தா மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிற 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கடிதத்தில் கடன் தொல்லையால் விபரீத முடிவை எடுத்ததாகவும், மகனுக்கு பல இடங்களில் இலட்சங்களில் செலவு செய்து உடல்நிலை சரியாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை திலக் தனது பெங்களூரில் உள்ள அண்ணன் சந்துருவுக்கு வாட்சப் எண்ணுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன சந்துரு, திலக்கின் பக்கத்து வீட்டுக்காரருக்கு தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படாததால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் சாய் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தை என்று கூறப்படுகிறது. இதற்காக மகனை காப்பாற்ற கடன் வாங்கி செலவு செய்த நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. துபாயில் மாதம் ரூ.5 இலட்சம் சம்பளத்திற்கு வேலைபார்த்து வந்த திலக், மகனின் உடல்நிலை காரணமாக வேலையை உத்தரவிட்டு சேலம் வந்துள்ளார்.
திலக்கின் தாயார் மரணப்படுக்கையில் அளித்த வாக்குமூலத்தின்படி, கடன் தொல்லை மற்றும் பங்குச்சந்தை முதலீடு தோல்வி காரணமாக தற்கொலை செய்ய மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்க, தூக்கு கயிறு கழுத்தை இறுக்கி வலிக்கும் என்பதால், விஷம் இறுதி தீர்ப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் விஷத்தை ஊற்றி குடும்பத்தினர் அனைவரும் குடித்து ஒவ்வொருவராய் செத்துமடிய, அதிகாலை 5 மணிக்கு தனது சகோதரருக்கு வாட்ஸப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு, திலக் இறுதியாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.